கல்வாரியின் அடியிலே கவலைகளை வைத்திட்டால்

Filed under: , by: Jerciline Sundar

அடியவர் இருவர், இருவருக்கும் ஒரே கவலை
பலவருடமாய் இருவருக்கும் பிள்ளைகளே இல்லை
ஒருவர் தீர்த்திட்டார் தம்கவலையை தமக்குத்தாமே
மற்றவரோ சேர்த்திட்டார் தம்கவலையை ஆண்டவரிடம்


தன்கவலையை தானே தீர்க்க சாராளும் நினைத்திட்டாள்
அழைத்திட்டாள் ஆகாரை ஆபிரகாமின் மறுமனையாய்
தாம் தீர்த்த தம் கவலை தனக்கே பெரும் தொல்லை
விரட்டினாள் ஆகாரை குழந்தையுடன் வீட்டை விட்டே


அந்நாளும் அன்னாளும் ஆண்டவரை அண்டினாள்
அவர்பாதம் தன்கவலையை அழுகையுடன் சேர்த்திட்டாள்
சமர்பித்த விண்ணப்பத்தை ஆண்டவரும் கேட்டார்
சாமுவேலாய் தந்தார் ஆசீர்வாதமாய் மாற்றினார்


கல்வாரியின்  அடியிலே கவலைகளை வைத்திட்டால்
கர்த்தர் இயேசுவும் கவலைகளை தீர்ப்பாரே
அவரே ஆசீர்வதித்தால் அதில் கவலைகள் இல்லையே
காப்பாரே உனையே, காத்தவர் சேர்ப்பார் கரையே  

0 comments: