எனக்கோர் வழியுண்டு

Filed under: , by: Jerciline Sundar

கலங்கினேன் திகைத்தேன் மலைத்தேன் - சுமந்தேன்
என்பாரம் என்சோகம் என்துக்கம் - அழுதேன்
பகலாய் இரவாய்; ஏங்கினேன் என்பாவம் தீர்க்க
வழியில்லை ஒரு நிலையில்லை எனக்கோ தெளிவில்லை




வந்தான் பிறந்தான் மலர்ந்தான் - கடுங்குளிரில்
புல்லணையில் கந்தையில் பசுந்தொட்டிலில் - அமைதியாய்
தூங்கினான் தெய்வமானான் - பாவம் போக்க
பலியாகி மீட்க மன்னுருவானான் மனுவேலனானான் 


மேய்ப்பனானான் மீட்பனானான் மோட்சமானான் - அடியவர்க்கு 
அன்பனானான் அருள் பெருகும் ஆண்டவனானான் - நமக்காய் 
பாவம் போக்கும் பலியானான் - இரத்தத்தினால் நமை மீட்டான் 
நமை சேர்க்க பரத்திலிருந்து மீண்டும் வருவான் 


கண்டேன் குளிர்ந்தேன் கண்கள் குளமானேன் - தீர்ந்தன 
என்பாரம் என்சோகம் என்துக்கம் - அன்புருவானேன்
பகலாய் இரவாய் பரமனை அண்டினேன் - அவன்பதம் 
வழியுண்டு நிலையுண்டு எனக்குள் தெளிவுண்டு 

0 comments: